மானாமதுரை: திமுக நிர்வாகிகளே கார்த்தி சிதம்பரத்தை சந்திக்க முடிய வில்லை என சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன் தெரிவித்தார்.
அவர் நேற்று மானாமதுரை பழைய பேருந்து நிலையம், தேவர் சிலை, கண்ணார் தெரு, சிவகங்கையில் சி.பி.காலனி, பேருந்து நிலையம், ராமச்சந்திர னார் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: அதிகாரம் படைத்த பதவிகளில் இருந்த ப.சிதம்பரத்துக்கு சிவ கங்கை மக்களுக்கு செய்ய மன மில்லை. ஒரு தொழிற்சாலை கூட இங்கு கொண்டு வரவில்லை. இங்குள்ளவர்கள் பிழைப்பு தேடி வெளிநாடு சென்றுவிட்டனர். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் இருந்த இளையான்குடி என்ற தொகுதியே கரைந்துவிட்டது. இதற்கு காரணம் ப.சிதம்பரம் தான். திமுக நிர்வாகிகளே கார்த்தி சிதம்பரத்தை சந்திக்க முடியவில்லை.
எனினும் கூட்டணி பாசத்தில் அவருக்கு வாக்கு கேட்டு வருகிறார்கள். இது உங்கள் பகுதி மக்களுக்கு செய்யும் துரோகம். ப.சிதம்பரத்தை போல் சிவகங்கையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று கூற மாட்டேன். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் தொழிற்சாலை களை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். தொகுதி வாரியாக 24 மணி நேரமும் செயல்படும் அலுவலகம் திறக்கப்படும். ப.சிதம்பரமாவது தொகுதி பக்கம் அவ்வப் போது தலை காட்டுவார். ஆனால், கார்த்தி சிதம்பரம் தொகுதி பக்கம் வரவே மாட்டார் என்று பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago