“மோடியின் குடும்பம் என்பது ‘ED - IT - CBI’ தான்!” - முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை: "மோடியின் குடும்பம் என்பது ‘ED - IT. - CBI’ தான்" என்று பாஜகவை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளளார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "பாஜகவின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரபூர்வமாகத் தோலுரிக்கப்பட்டுள்ளது.

பாஜகவுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில் 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.

10 ஆண்டு பாஜக ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?

“பேச நா இரண்டுடையாய் போற்றி” எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்!" என்று விமர்சித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE