தேர்தல் சோதனையால் வியாபாரிகளுக்கு பாதிப்பு தொடர்ந்தால் ஏப்.9 ஆர்ப்பாட்டம்: வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நிர்வாகிகள், நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவை சந்தித்து மனு அளித்தனர்.

இதுகுறித்து, விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிகாரிகள் நடத்தும் சோதனையால் வியாபாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, வணிக சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும்ஏப்.19-ம் தேதி வரை கடையடைப்பு என அறிவித்திருந்தோம்.

இதுகுறித்து, அழைத்ததன் பேரில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்தோம். அவரும் தமிழகம்முழுவதும் தேர்தல் அதிகாரிகளைஅழைத்து வியாபாரிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவதாகவும், மாவட்ட அளவில் ஆட்சியர்களிடம், வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

இது தவறும்பட்சத்தில், வரும்ஏப்.9-ம் தேதி தமிழகம் முழுவதும்மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம்நடத்துவோம். அதேபோல், தமிழகம் முழுவதும் மருந்து வணிகக் கடைகளில் நுழைந்து ஆய்வு என்ற பெயரில் மாதம் ஒரு வழக்கு பதிய வேண்டும் என அறிவித்துள்ளனர். இதைஉடனடியாக திரும்ப பெற வேண்டும்என சுகாதாரத் துறை செயலரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.

ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம்தான் போதைப்பொருள்கள் அதிகளவில் பொதுமக்களுக்கு கிடைக்கிறது. அதை தடை செய்யாமல், மருந்து கடைகளில் சோதிப்பது ஏற்புடையதல்ல என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE