தென்காசி (தனி) மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுவதால், இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. தென்காசி தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் (தனி), சங்கரன்கோவில் (தனி), விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), ராஜபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கும்.
இவற்றில் தற்போது, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ராஜபாளையம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் திமுக வசமும், கடையநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகள் அதிமுக வசமும், தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வசமும் உள்ளன. கடந்த 1957, 1962-ம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில் பொது தொகுதியாக இருந்த தென்காசி, அதன் பின்னர் இப்போது வரை தனி தொகுதியாக நீடிக்கிறது. தென் மாவட்டங்களில் உள்ள ஒரே தனி தொகுதி தென்காசியே.
தென்காசி தொகுதியில் 1957 முதல் காங்கிரஸ் தொடர்ச்சியாக 9 முறையும், அதிமுக 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ், திமுக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1957-ம் ஆண்டு காங்கிரஸை சேர்ந்த எம்.சங்கரபாண்டியன், 1962-ம் ஆண்டு காங்கிரஸை சேர்ந்த எம்.பி.சாமி, 1967-ம் ஆண்டு காங்கிரஸை சேர்ந்த ஆர்.எஸ்.ஆறுமுகம், 1971-ம் ஆண்டு காங்கிரஸை சேர்ந்த செல்லச்சாமி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
1977, 1980, 1984, 1989, 1991-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 5 முறை காங்கிரஸை சேர்ந்த எம்.அருணாச்சலம் வெற்றி பெற்றார். காங்கிரஸ் ஆட்சியில் அவர் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். 1996-ம் ஆண்டு தமாகா சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 6-வது முறையாக அருணாச்சலம் வெற்றி பெற்றார்.
» ஒவைசி தலைமையில் உ.பி.யில் புதிய கூட்டணி
» “தமிழகத்தில் 2-ம் இடத்துக்கு பாஜகவால் வர முடியாது” - முத்தரசன் சிறப்பு நேர்காணல்
1998, 1999-ம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த எஸ்.முருகேசன் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றார். 2004-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.அப்பாதுரை, 2009-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.லிங்கம், 2014-ம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த வசந்தி முருகேசன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக திமுக வெற்றி பெற்றது. திமுகவைச் சேர்ந்த தனுஷ் எம்.குமார் 4,76,156 வாக்குகள் பெற்றார். இவர் அதிமுக வேட்பாளரான புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை விட 1,20,286 வாக்குகள் கூடுதலாக பெற்றார். ஆனால், இம்முறை தனுஷ் எம்.குமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, சங்கரன்கோவிலைச் சேர்ந்த டாக்டர் ராணி ஸ்ரீகுமார் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.
தென்காசி தொகுதியில் தொடர்ந்து 6 முறை போட்டியிட்டு தோல்வியடைந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இப்போது 7-வது முறையாக அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகதலைவர் ஜான்பாண்டியன், இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக தென்காசி தொகுதியில் களம் காண்கிறார்.
நாம் தமிழர் கட்சியில் கடந்த முறை போட்டியிட்ட இசை மதிவாணன் மீண்டும் போட்டியிடுகிறார். சுயேச்சைகள் உட்பட 15 பேர் களத்தில் இருந்தாலும் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலத்தை நம்பி திமுக வேட்பாளர் களம் காண்கிறார். அவருக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்துள்ளார்.
அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் தனது கட்சியின் பலத்தை நம்பி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிகளம் காண்கிறார். அவருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்துள்ளார். பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் தனது கட்சியின் பலத்தை நம்பி தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் களம் காண்கிறார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணனும் வாக்குகளை வசப்படுத்த தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போதைய திமுக எம்.பி. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி, மற்றகட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன.
நிறைவேறாத வாக்குறுதிகள்: குற்றாலத்தை சர்வதேச அளவிலான சுற்றுலா தலமாக்க வேண்டும். விவசாயம், விசைத்தறி, பீடி தொழிலை முக்கிய தொழிலாக கொண்ட தென்காசி மாவட்டத்தில் சென்ட் தொழிற்சாலை, மாம்பழச்சாறு தொழிற்சாலை, எலுமிச்சை சார்ந்த தொழிற்சாலை, ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரி செய்ய வேண்டும், மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும், இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கைகள் அரசியல் கட்சிகளால் வாக்குறுதிகளாகவும் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago