ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார்.
முதுகுளத்தூர் தொகுதி நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: பிரதமர் மோடி தமிழகத்துக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்தார். அந்நிதியை பெற்றுக்கொண்டு பாஜகவுக்கு துரோகம் செய்தவர் பழனிசாமி.
மத்திய அரசின் துணையுடன் 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி செய்தார். பழனிசாமியின் ஆட்சி தொடர 4 ஆண்டுகள் தரை மட்டத்துக்குச் சென்று ஆதரித்தேன். தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன.
எனக்கு எதிராக 5 பன்னீர்செல்வங்களை தேடிப்பிடித்து களமிறக்கி உள்ளனர். எத்தனை பன்னீர் செல்வங்கள் போட்டியிட்டாலும் ஜெயலலிதாவின் ஆசியுடன் 3 முறை முதல்வராக இருந்த என்னை மக்களுக்கு நன்றாகத் தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.
» “ரூ.500 கோடி, 10 சீட் கிடைத்திருக்கும்” - தேனியில் சீமான் பிரச்சாரம்
» “எங்கும் தைரியமாக பேசுவேன், ஆனால்...” - கண்கலங்கிய பிரேமலதா
இக்கூட்டத்தில் எம்பிக்கள் ரவீந்திரநாத், தர்மர், பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன், அமமுக மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago