பிரச்சாரத்தில் தடா பெரியசாமி: அதிமுக புதிய வியூகம்

By செய்திப்பிரிவு

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தாலும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்க்கும் அளவுக்கு பாஜக கூட்டணியை அதிமுக வலுவாக எதிர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக எஸ்சி அணி தலைவர் தடா பெரியசாமி, பாஜக மீதான அதிருப்தியால் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். இணைந்த உடனே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எஸ்.முருகன் ஆகியோர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்நிலையில் அதிமுக சார்பில் பாஜகவை விமர்சிக்க சரியான நபர் தடா பெரியசாமி தான் என முடிவு செய்து, மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அவரை களமிறக்க அதிமுக முடிவு செய்துள்ளது. இந்த சூழலில், அவரின் தேர்தல் பிரச்சார பயண திட்டத்தையும் அதிமுக வெளியிட்டுள்ளது.

அதன்படி, அவர், ஏப்.4-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை காஞ்சிபுரம், விழுப்புரம், சிதம்பரம், நாகப்பட்டினம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், நீலகிரி ஆகிய 9 மக்களவை தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

இத்தொகுதிகளில் 6 தொகுதிகள் தனித் தொகுதிகளாகவும், 5 தொகுதிகள் பாஜக போட்டியிடும் தொகுதிகளாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE