சிகிச்சைக்கு பின்னர் கோவை வந்த சத்குருவுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு

By செய்திப்பிரிவு

கோவை: கோவை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு கடந்த மாதம் புதுடெல்லி சென்றிருந்தார். அப்போது தலைவலியால் அவதிப்பட்ட அவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த போது, மூளையில் பாதிப்பு இருப்பது தெரிந்தது.

தொடர்ந்து கடந்த மாதம் 17-ம் தேதி சத்குருவுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்னர், மருத்துவமனையிலிருந்து கடந்த 27-ம் தேதி சத்குரு டிஸ்சார்ஜ் ஆனார். அதைத் தொடர்ந்து சத் குரு நேற்று புது டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் ஈஷா நிர்வாகிகள், பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதன் பின்னர், சத்குரு விமான நிலையத்திலிருந்து கார் மூலம் ஆலாந்துறையை அடுத்துள்ள ஈஷா யோகா மையத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

சிகிச்சைக்கு பின்னர் சத்குரு வந்ததையொட்டி, ஈஷா நுழைவுவாயிலான மலை வாசலில் சுற்றுவட்டார கிராம மக்கள், பழங்குடியின மக்கள் ஒன்று திரண்டு சத்குருவை வரவேற்றனர். தவிர, வழி நெடுகிலும், சாலை ஓரங்களில் உள்ளூர் கிராம மக்கள் ஒன்று கூடி பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து சத்குருவை வரவேற்றனர். பொது மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட சத் குரு அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு ஈஷா வளாகத்துக்குள் சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்