திமுகவின் அணுகுமுறையை பின்பற்றுவதால் அதிமுகவை இந்து உணர்வாளர்கள் கைவிடுவார்கள்: அர்ஜுன் சம்பத் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: திமுகவின் அணுகுமுறையைப் பின்பற்றுவதால், அதிமுகவை இந்து உணர்வாளர்கள் கைவிடுவார்கள் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இந்து விரோதக் கொள்கைகளை திமுக கடைப்பிடித்தபோதும், பிரிவினைவாத, தேச விரோத அரசியலை முன்னெடுத்தபோதும், திமுகவுக்கு எதிராக அதிமுக மட்டுமே இருந்தது. குமரி மாவட்டத்தில் இந்துக்கள் பாதிக்கப்பட்டபோது, இந்து முன்னணியை ஆதரித்தவர் எம்ஜிஆர். இதனால் இந்து உணர்வாளர்கள் அதிமுகவுக்கு ஆதரவளித்தனர். மேலும், ராமரை கருணாநிதி விமர்சித்தபோது, அதிமுகபோராட்டம் நடத்தியதால், ஜெயலலிதாவை இந்து மக்கள்கட்சி ஆதரித்தது. இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை, ராமகோபாலன் வெட்டப்பட்டது போன்ற சம்பவங்களால் இந்து அமைப்புகளின் செல்வாக்கு அதிகரித்தது. எனினும், திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, இந்து அமைப்பினர் தொடர்ந்து அதிமுகவை ஆதரித்தனர். இதனால் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாகத் திகழ்ந்தது.

ஆனால், தற்போது நிலைமைமாறிவிட்டது. பாஜகவும், அண்ணாமலையும் இந்து மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்கின்றனர். அண்ணாமலையின் யாத்திரை,பிரதமர் மோடியின் சுற்றுப்பயணங்களால் தமிழகத்தில் மோடி அலை உருவாகியுள்ளது. எனவே, இந்து மக்கள் கட்சியின் ஆதரவுடன், 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெல்லும். நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கோவையில் அண்ணாமலை வெற்றிபெறுவார்.

கோவை குண்டுவெடிப்பு கைதிகள் விடுதலை, எஸ்டிபிஐ கட்சியின் உறவு என திமுக பாணியில் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் தற்போதைய அதிமுகவின் அணுகுமுறை, இந்து அமைப்புகள் மட்டுமின்றி, அதிமுக தொண்டர்களிடமும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை அதிமுக தலைமை புரிந்துகொள்ள வேண்டும்.

திமுகவின் அணுகுமுறையை தற்போது அதிமுக பின்பற்றுவது தவறானது. இதனால், இந்து உணர்வாளர்கள் அதிமுகவைக் கைவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்