பணம் வாங்காமல் வாக்களிக்க மண்பாண்டத் தொழிலாளர்கள் முடிவு

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: எவ்வித பரிசுப் பொருட்களோ, பணமோ வாங்காமல் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் சங்கத்தின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் ராதாபு ரத்தில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.ஐயனார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜி.வினோத் வரவேற்றார். தொடர்ந்து மண்பாண்டத் தொழிலாளர்களின் நலன் குறித்து எந்த அரசியல் கட்சிகளும் கண்டு கொள்வதில்லை. தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாமல் புறந் தள்ளப்பட்டு வருகிறது.

எனவே மண்பாண்டத் தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும். மக்களவைத் தேர்தலில் மாநிலத் தலைமை அறிவித்த தீர்மானத்தின்படி எவ்வித பணமும், பரிசுப் பொருள்களுமின்றி 100 சதவீதம் வாக்களிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், இணை செயலாளர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்