திருப்புவனம்: தொகுதிக்கு சரியாக வரவில்லை யென்ற குறையைச் சமாளித்து கார்த்தி சிதம்பரத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என மானாமதுரை திமுக நகராட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடி பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இண்டியா கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், தமிழரசி எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாரியப்பன் கென்னடி பேசியதாவது: கார்த்தி சிதம்பரம் தொகுதிக்குள் சரியாக வரவில்லை என்ற குறை இருந்தாலும், அதையெல்லாம் சமாளித்து அவரை நாம் வெற்றிபெற வைக்க வேண்டும். மேலும் வெற்றி பெற்றால் இனி கடந்த காலங்களைப்போல் இருக்க மாட்டேன். உங்களோடு ஒருவனாக இருந்து பணியாற்றுவேன் என்று அவர் வாக்குறுதி கொடுத்துள்ளார். அதை மனதில் வைத்து அமோகமாக வெற்றி பெற வைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து ப.சிதம்பரம் பேசியதாவது: மாரியப்பன் கென்னடிக்கு நான் மறுப்புத் தெரிவித்ததாக நினைக்க வேண்டாம். அவர் பேசும்போது, எம்பி தொகுதிக்குள் இன்னும் அதிகமாக வர வேண்டும் என்று சொன்னார். திருப்புவனம் ஒன்றியத்தில் மட்டும் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் 17 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதே போல் திருப்புவனம் பேரூராட்சியில் 6 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்று பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago