மேட்டுப்பாளையம்: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவெற்றி பெற பாஜக ஓட்டுகளே உதவின என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டப்பேரவை தொகுதி நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ளது. நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இவர், நேற்று மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் உருளைக்கிழங்கு மண்டிகள், பூண்டு மண்டிகளுக்கு நேரில் சென்று அங்கு பணியாற்றும் தொழிலாளர்களிடம் நோட்டீஸ்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.
அதன் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழையும் தமிழர்களையும் கடந்த எழுபது ஆண்டுகளாக திமுக ஏமாற்றியும், வஞ்சித்ததையும் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. தமிழகத்துக்கு வளர்ச்சிதிட்டங்களுக்கென கடந்த பத்தாண்டுகளில் ரூ.11 லட்சம் கோடியை பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளார். இலங்கையில் தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போதும் இலங்கை அரசிடம் பேசி அவர்களை காப்பாற்றியவர் பிரதமர் மோடி. லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுவதற்கு காரணமான திமுக - காங்கிரஸ் கூட்டணியினர் தமிழர் நலன் குறித்து பேச தகுதியற்றவர்கள்.
கோட்டும், சூட்டும் போட்டு\கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வெளிநாடு செல்கின்றனர். ஆனால், பிரதமர் மோடி நமது கலாச்சார உடையில் தான் எங்கும் செல்கிறார். அதிமுகவுடனோ அல்லது திமுகவுடனோ ரகசிய கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளோம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுக வெற்றி பெற பாஜக ஓட்டுகளே உதவியது என்பதை அவர்கள் உணர வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
2 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago