“தங்கர் பச்சானிடம் பணம் இல்லை... அவர் கடனில் இருக்கிறார்!” - ராமதாஸ்

By செய்திப்பிரிவு

கடலூர்: எதிர்த்தரப்பில் இருப்பவர்கள், ‘மண்ணை பொன்னாக்குவோம்’ என்றெல்லாம் வாக்குறுதிகளை அளிப்பார்கள், ஏமாற வேண்டாம் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடலூர் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து, அக்கட்சியின் நிறுவ னர் மருத்துவர் ராமதாஸ் குள்ளஞ் சாவடியில் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

அவர் பேசுகையில், “கடலூரில் போட்டியிடும் தங்கர்பச்சான் நம்மில் ஒருவர், இப்பகுதியில் விளையும் மா, பலா, வாழை, முந்திரி, மல்லாக்கொட்டைகள் மட்டுமின்றி இப்பகுதி மக்களின் வலிகளை நன்கு அறிந்தவர். இவரை எதிர்த்துப் போட்டியிடுபவர் நமக்கு சொந்தமும் இல்லை, பந்தமும் இல்லை” என்று கூறி, அதையே பாட்டாக பாடினார்.

தொடர்ந்து பேசிய ராமதாஸ், “சொந்தம் என ஏமாறக்கூடாது. ஜாக்கிரதையாக இருங்கள். பணம் வரும்; போகும் ஆனால் தங்கர் பச்சானிடம் தற்போது பணம் இல்லை. அவர் கடனில் உள்ளார்.அவரிடம் பணம் இருந்தால் அழகான 10 படங்களை எடுப்பார். அதற்காக இங்கேயே நடிகர், நடி கைகளை தேர்வு செய்து விடுவார்.

கடலூர் மக்களவைத் தொகுதி யில் அனைவரும் அறிந்தவராக தங்கர்பச்சான் உள்ளார். இங்குபெண்கள் அதிகமாக கூடியிருக் கின்றனர். பெண்களை நாங்கள் தேவதையாக கருதுகிறோம். இப்பகுதி முந்திரிக் காடுகளில் இருந்துபெண்கள் படித்து, உயர்ந்தநிலைக்கு வந்து கொண்டிருக்கின் றனர். இது மகிழ்ச்சியைத் தருகி றது. நமது பகுதி வளர்ச்சி பெறதங்கர்பச்சானை ஆதரிக்க வேண்டும். மோடியை உலகத் தலை வர்கள் பாராட்டுகிறார்கள். அவர் பிரதமராக இவரது வாக்கு தேவை.

எதிர்த்தரப்பில் இருப்பவர்கள், ‘மண்ணை பொன்னாக்குவோம்’ என்றெல்லாம் வாக்குறுதிகளை அளிப்பார்கள், ஏமாற வேண்டாம். தங்கர்பச்சான் மக்களின் பணிகளை தரமாக செய்யக்கூடியவர். இவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்” என்றார்.

இந்த பிரச்சாரத்தில் பாமக சொத்து பாதுகப்புக்குழு தலை வர் டாக்டர் கோவிந்தசாமி, மாநில வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, பாமக மாவட்ட செயலாளர்கள் சண்.முத்துகிருஷ்ணன், ஜெகன்மாநில நிர்வாகி பழதாமரைக்கண் ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE