சிவகங்கை: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குலசாமிக்கு கிடா வெட்ட முடியாது, மது, சுருட்டு படைக்க முடியாது, என சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இதில் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், நம்முடைய மாநில உரிமைகள் பறிக்கப்படும். நமது மொழி அழிக்கப்படும். வாழ்வியல் முறை சிதைக்கப்படும். பாஜக முழுக்க முழுக்க இந்துத்துவா ஆட்சியை நடத்துகிறது. இந்தி மட்டுமே பேச வேண்டும். மற்ற மொழிகளைப் பேசக் கூடாது.
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இங்கு இருக்கக் கூடாது என நினைக்கின்றனர். குலசாமிக்கு கிடா, கோழி வெட்ட முடியாது. சுருட்டு, மது படைக்க முடியாது. சம்ஸ்கிருத மொழி அடிப் படையில்தான் சாமி கும்பிட வேண்டும். கோயில்களை தனியார் கையில் ஒப்படைத்து, குறிப்பிட்ட நபர்களை மட்டுமே உள்ளே அனுமதிப்பர். இனி தமிழில் தொலைக்காட்சி தொடர்கள், நாட கங்கள் வராது.
அனைத்தும் இந்தி தொலைக் காட்சித் தொடர்கள், நாடகங்கள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படும். மளிகைப் பொருட்களில் இருந்து அனைத்துப் பொருட்களின் விலையையும் உயர்த்தி விட்டனர். நமது சேமிப்பு குறை வதற்கு பாஜக அரசுதான் காரணம். இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago