குரூப் 1 நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: குரூப் 1 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன.

அதன்படி, துணை ஆட்சியர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் உட்பட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு, மாநிலம் முழுவதும் 2022 நவம்பர் 19-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 1.90 லட்சம் பட்டதாரிகள் எழுதினர்.

அவர்களுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி 2023 ஏப்ரல்28-ம் தேதி வெளியிட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள் அடுத்ததாக முதன்மைத் தேர்வு எழுத வேண்டும். அதன்படி குரூப் 1 முதன்மைத் தேர்வு 2023 ஆகஸ்ட் 10 முதல் 13-ம்தேதி வரை நடைபெற்றது. இந்ததேர்வை 2,113 பேர் வரை எழுதினர்.

அதன் முடிவுகள் மார்ச் 6-ம்தேதி வெளியானது. அதில் 198 பட்டதாரிகள் வெற்றி பெற்றிருந்தனர். அவர்களுக்கான நேர்முகத் தேர்வுசென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் மார்ச் 26 முதல் 28-ம் தேதி வரைநடத்தப்பட்டது.

இந்நிலையில், முதன்மைத் தேர்வுமற்றும் நேர்முகத் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலான முடிவுகளை நேற்று முன்தினம் இரவு டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. முதன்மைத் தேர்வில் வெற்றிபெற்ற 198 பேரில் 197 பேரின் மதிப்பெண்கள் அதில் இடம்பெற்று இருந்தன. இதில் 587.25 மதிப்பெண் பெற்ற பெண் தேர்வர் முதல் இடத்தைபெற்றுள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://www.tnpsc.gov.in/ எனும் வலைதளத்தில் சென்றுஅறிந்து கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE