ராமநாதபுரம்: கமுதி அருகே தேர்தலை புறக் கணிக்கப் போவதாக அறிவித்த 2 கிராமங்களில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மண்டலமாணிக்கம் ஊராட்சிக் குட்பட்ட கோடாங்கிபட்டியில் அடிப் படை வசதிகள், தார் சாலை வசதிகள் செய்து தரப்படாததால், தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, கமுதி வட்டாட்சியர் வ.சேதுராமன், காவல் ஆய்வாளர் குருநாதன், கிராம நிர்வாக அலுவலர் பாண்டி, தனிப்பிரிவு சார்பு-ஆய்வாளர் முத்துசாமி உள்ளிட்டோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அடிப்படை வசதிகள் கோரி அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
» ரங்கசாமியின் துருப்புச்சீட்டாக இருந்த புதுச்சேரி மாநில அந்தஸ்து கோஷம் என்னவானது?
» கோவை தொழில் துறையினர் ஆதரவு யாருக்கு? - வெற்றியை தீர்மானிக்கும் குறுந்தொழில் நிறுவனங்கள்
இதேபோல், அடிப்படை வசதிகள் செய்து தராததால், தேர்தலை புறக்கணிப்போம் என அறிவித்த கோவிலாங்குளம் ஊராட்சிக்குட் பட்ட நெறிஞ்சிப்பட்டி கிராம பொது மக்களிடம், கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் கோட்டைராஜ், மணி மேகலை (கிராம ஊராட்சிகள்), சார்பு-ஆய்வாளர் நாகநாதன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த 2 கிராமங்களிலும் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால், அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago