சிவகாசி: சிவகாசியில் இண்டியா கூட்டணி சார்பில் தேர்தல் அலுவலக திறப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
விழாவில் விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான மாணிக்கம் தாகூர் எம்.பி பேசுகையில்,
அமைச்சர் தங்கம் தென்னரசு தென் தமிழகத்தின் அடையாளமாக உருவெடுத்து வருகிறார். ஹிந்தி மற்றும் ஆங்கில ஊடகங்கள் மோடி அமித் ஷாவின் கைப்பாவையாக மாறிவிட்டது. ராமர் கோயில் திறக்கும் நேரத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. இண்டியா கூட்டணி 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும்.
பாஜகவின் ‘பி’ டீமான அதிமுக, தேமுதிக தனித்து நின்று சிறுபான்மை மக்களை குழப்புகின்றனர் என அவர் தெரிவித்தார்.
மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் அசோகன் பேசுகையில், விருதுநகர் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மாணிக்கம் தாகூர் மத்திய அமைச்சராக வருவார் என்றார். விழாவில் முன்னாள் எம்பி சிப்பிப்பாரை ரவிச்சந்திரன், மேயர் சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago