ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக விசைப்படகு மீனவர்கள் 7 பேரைநிபந்தனையுடன் விடுதலை செய்தும், படகின் உரிமையாளர்கள் ஆவணங்களுடன் ஜுலை 11-ம் தேதி நேரில் ஆஜராகவும் மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து மார்ச் 20-ம் தேதி கடலுக்குச் சென்ற மோகன், மகத்துவம் ஆகியோருக்குச் சொந்தமான 2 படகுகளை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், அந்த படகுகளில் இருந்த ஜஸ்டின் திரவியம், கோவிந்தன், முனியராஜ், ஆரோக்கியம், சகயா நிக்சன், முத்துராமலிங்கம், முனியசாமி ஆகிய 7 மீனவர்களைச் சிறை பிடித்தனர்.
அவர்கள் மீது எல்லை தாண்டுதல், அனுமதியின்றி மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்டபிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
» ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி பரிதாப உயிரிழப்பு: முதல்வர் இரங்கல்; வைகோ அஞ்சலி
» 39 தொகுதிகளிலும் மனுக்கள் பரிசீலனை முடிந்தது: தமிழகத்தில் 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு
வழக்கை விசாரித்த நீதிபதிலத்தீப், தமிழக மீனவர்கள் மீண்டும்இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மேலும், வரும் ஜூலை 11-ம்தேதி 2 படகுகளின் உரிமையாளர்கள், உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி, வழக்கை தள்ளிவைத்தார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago