தேனி: தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல பாதையை வகுத்துத் தந்தால் நடிகர் விஜய் உடன் நாங்கள் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கிறோம் என தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்தார்.
தேனியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.ரவீந்திரநாத், “திமுக வேட்பாளர் தங்கத் தமிழ்ச் செல்வன் கடந்தகாலங்களில் தேனி மாவட்டத்தின் செல்லப்பிள்ளை டிடிவி தினகரன் என்று அவர் வாயாலேயே சொல்லியிருக்கிறார்.
தேனி மக்களுக்கு அவர் மிகவும் பரிச்சயமானவர். அவர் எம்.பியாக இருந்தபோது கிராமம் கிராமமாக சென்றவர். நான் வேறு அவர் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாது. இதன் காரணமாகவே டிடிவி தினகரனுக்கு தேனி தொகுதியை விட்டுக் கொடுத்தோம்.
ஜனநாயக நாட்டில் அனைவரும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜய் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அடுத்தகட்ட முயற்சியாக அரசியல் கட்சி தொடங்கி அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி தயாராகி விட்டார்.
» “மோடி அலை என்ற ஒன்று இல்லை என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகு தெரியும்” - கே.பி.முனுசாமி கருத்து
» இலங்கையில் சிறைபட்டுள்ள மீனவர்களை மத்திய அரசு தலையிட்டு மீட்க வேண்டும்: முத்தரசன்
அந்தப் பாதையில் அவர் பயணித்து தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல பாதையை வகுத்துத் தந்தால் அவரோடு நாங்கள் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago