திருப்பூர்: திமுக ஆட்சியில் தமிழுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியில் அரசுக் கட்டிடங்களில் மட்டுமே ‘தமிழ் வாழ்க’ என்ற பதாகை மின்னொளியில் பளிச்சிடுகிறது. தமிழர்கள் வீட்டிலும், மூளையிலும் ஆங்கிலம் திணிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், சென்னை மேயராக இருந்த போது தான் மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி திணிக்கப்பட்டு பரவலாக்கப்பட்டது. சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழ் சிறப்புப் பாடமாக, மூன்றாவது மொழியாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழ் மொழி சிறப்பு பாடத் தேர்வில் இதுவரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் படிக்காமலேயே பள்ளிப்படிப்பை மாணவர்கள் முடிக்கும் வேடிக்கை, திமுக ஆட்சியில் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் சுமார் 15 ஆயிரம் மாணவர்களும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 17,633 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை.
திமுக ஆட்சியில், தமிழுக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. தமிழக மாணவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், பள்ளிகளில் நடக்கும் முறைகேடுகளை களையவும், மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை தோற்கடித்து, மக்கள் பாடம்பு கட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago