சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் புராதன சின்னமாக அறிவிக்கப்படவில்லை என மத்திய தொல்லியல் துறையும், இந்து சமய அறநிலையத் துறையும் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளன.
சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியில் எந்தவொரு அனுமதியும் பெறாமல் நந்தவனம் அமைக்கப்பட்டு வருவதாகவும், கோயிலின் முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்களில் அனுமதியின்றி நூறு அறைகள் கட்டப்பட்டு வருவதாகவும் கூறி நடராஜன் தீட்சிதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் பிரகாரத்தில் அனுமதியின்றி கட்டுமானங்கள் கட்டப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அனுமதியன்றி கட்டுமானங்கள் கட்டப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு இருந்தனர்.
» தமிழகத்தில் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
» மருத்துவ கல்லூரிகள் போலி கடிதங்களை நம்ப வேண்டாம்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி பொது தீட்சிதர்கள் குழு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பொது தீட்சிதர்கள் குழு சார்பில், இந்த விவகாரத்தில் எங்களது தரப்பு வாதத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சிதம்பரம் கோயிலை மத்திய தொல்லியல் துறைதான் ஆய்வு செய்ய முடியும் என்றும் அறநிலையத் துறை ஆய்வு செய்ய அதிகாரம் கிடையாது என்றும் வாதிடப்பட்டது.
ஆனால் பதிலுக்கு தமிழக அறநிலையத் துறை மற்றும் மத்திய தொல்லியல் துறை சார்பில் சிதம்பரம் நடராஜர் கோயில் புராதன சின்னம் கிடையாது என்பதால் மத்திய தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என வாதிடப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், ஏற்கெனவே நாங்கள் விசாரித்த வழக்கில் இறுதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதால், அதை மறுஆய்வு செய்ய வேண்டியதில்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago