“மீண்டும் பிரதமரானால் அரசியல் சாசனத்தை திருத்துவார் மோடி” - ப.சிதம்பரம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

தேவகோட்டை: 3-வது முறையாக மோடி பிரத மரானால் அரசியல் சாசனத்தை நிச்சயம் திருத்திவிடுவார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இண்டியா கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: மிருக பலத்தோடு ஆட்சி அமைத்து 3-வது முறையாக மோடி பிரதம ரானால் அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனத்தை நிச்சயம் திருத்தி விடுவார். ஆர்எஸ்எஸ்-க்கு ஓர் அரசியல் சாசனம் உள்ளது. அதைக் கொண்டு வந்துவிடுவர்.

முதல்வராக இருந்த பழனிசாமி தற்போது சற்று குரலை உயர்த்தி பேசி வருகிறார். ஆனாலும் காங்கிரஸ், திமுகவை விமர்சிக்கிறார். பாஜகவை விமர்சிக்க வில்லை. அவருக்கு பாஜகவுடன் ரகசிய உறவு இருக்கிறது என மக்கள் சந்தேகப்படுவதில் என்ன தவறு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்