ஆம்புலன்ஸ் வேனில் செம்மரக் கட்டைகளை கடத்திய கும்பல் கைது: பட்டதாரி இளைஞர்களிடமும் பல லட்சம் மோசடி

ஆம்புலன்ஸ் வேனில் போலீஸ் உடையுடன் செம்மரக் கட்டைகளை கடத்திய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை சேர்ந்த செல்வம்(29) என்பவர் சென்னை காவல் ஆணை யரிடம் கொடுத்த புகாரில், "எனது கிராமத்தை சேர்ந்த பட்டதாரிகள் பலருக்கு வேலை வாங்கித் தருவதாக சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ஒவ்வொருவரிடமும் ரூ.65 ஆயிரம் வசூல் செய்து மோசடி செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந் தார்.

புகாரின் பேரில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த கார்த்தி கேயன்(22) என்பவரை கைது செய் தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசார ணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

பெரம்பூரை சேர்ந்த கார்த்திகே யனின் சகோதரி வீடு அரியலூர் மாவட்டம் ஒலையூர் கிராமத்தில் உள்ளது. அக்கா வீட்டுக்கு அடிக் கடி சென்ற கார்த்திகேயன் தன்னை ஒரு மாநகராட்சி அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டிருக் கிறார். சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அங்குள்ள பலரிடம் ரூ.65 ஆயிரம் வீதம் வசூல் செய்திருக்கிறார்.

இவருக்கு உதவியாக பெரம்பூரை சேர்ந்த டில்லிபாபு(19), மரியசூசை(22), சந்தீப்(23) ஆகியோர் இருந்துள்ளனர். எழும்பூரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மரியசூசை வேலை செய்கிறார். அவர் அரசு உத்தரவுபோல ஏராளமான உத்தரவு நகல்களை இங்கிருந்து தயாரித்து தந்திருக்கிறார்.

இந்த 4 பேருக்கும் செம்மரக் கடத்தல் கும்பலுடனும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. சுழல் விளக்கு பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வேனில் செம்மரக் கட்டைகளை அடுக்கி எடுத்துச் செல்வார்கள். யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க போலீஸ் போல உடையணிந்துகொண்டு முன் சீட்டில் கார்த்திகேயன் அமர்ந்துகொள்வார். ஆம்புலன்ஸ் வேனை டில்லிபாபு ஓட்டிச் செல்வாராம் என்று கூறினார்.

விசாரணையில் கிடைத்துள்ள இந்த தகவல்களை தொடர்ந்து 4 பேரையும் போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர், அரசு போலி முத்திரை, போலீஸ் உடை ஆகியவை கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டுள்ள 4 பேரும் வேறு ஏதாவது மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE