விதிகளை மீறியதாக தி.மலை திமுக எம்.பி மீது தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறி 6 பேருடன் வேட்பு மனு தாக்கல் செய்தாக திமுக வேட்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாஜக வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் புகார் அளித்துள்ளார்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட, நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை நேற்று (மார்ச் 25-ம் தேதி) வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளருடன் 4 பேர் மட்டும் இருக்க வேண்டும் என தேர்தல் நடத்தை விதியாக தேர்தல் ஆணையம் அமல்படுத்தி உள்ளது.

ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியனிடம் வேட்பாளர் அண்ணாதுரை வேட்பு மனு தாக்கல் செய்தபோது, அவருடன் இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் 4 பேர் இருக்க, அவருக்கு பின்னால் 4 அடி இடைவெளியில், திமுக வழக்கறிஞர் கார்த்திகேயன் உட்பட 2 பேர் கூடுதலாக நின்றிருந்தனர். இது குறித்து இந்து தமிழ் திசை இணையதளத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது.

இந்நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் இன்று(மார்ச் 26-ம் தேதி) இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரில், “திருவண்ணாமலை திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தபோது, அவருடன் 6 பேர் இருந்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அண்ணாதுரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்