சென்னை: சென்னை மாவட்டத்தில் 3 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பணிகளைப் பார்வையிட 3 தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் 2 காவல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் 3 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பணிகளை கண்காணித்திட 3 தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் 2 காவல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வட சென்னை மக்களவைத் தொகுதி: வட சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், ராயபுரம், பெரம்பூர், கொளத்தூர் மற்றும் திரு.வி.க.நகர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணிகளை கண்காணித்திட தேர்தல் பொது பார்வையாளர் கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி (கைபேசி எண் 94459 10953) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரின் தொடர்பு அலுவலர் ஜி. அருள் விஜூ (கைபேசி எண். 94451 94760).
மத்திய சென்னை மக்களவைத் தொகுதி: மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணாநகர், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மற்றும் ஆயிரம் விளக்கு ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணிகளை கண்காணித்திட தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் டி. சுரேஷ் (கைபேசி எண் 94459 10956) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரின் தொடர்பு அலுவலர் பி. சிவகுமார் (கைபேசி எண். 95660 82476).
» கிளாம்பாக்கம், கோயம்பேட்டில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம் @ புனித வெள்ளி, வார இறுதி நாட்கள்
» பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அட்டவணை வெளியீடு: நவம்பரில் ஆஸி. செல்கிறது இந்தியா
தென் சென்னை மக்களவைத் தொகுதி: தென் சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணிகளை கண்காணித்திட தேர்தல் பொது பார்வையாளர் முத்தாடா ரவிச்சந்திரா (கைபேசி எண் 94459 10957) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரின் தொடர்பு அலுவலர் டி. கே. கணேசன் (கைபேசி எண். 94451 90218).
காவல் பார்வையாளர்கள்: வட சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் காவல் பணிகளை கண்காணித்திட தேர்தல் காவல் பார்வையாளர் உதய் பாஸ்கர் பில்லா (கைபேசி எண் 94459 10962) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரின் தொடர்பு அலுவலர் ஆனந்த்ராஜ் (கைபேசி எண். 99940 45544). மத்திய சென்னை மற்றும் தென் சென்னை மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் காவல் பணிகளை கண்காணித்திட காவல் பார்வையாளர் சஞ்சய் பாட்டியா (கைபேசி எண் 94459 10966) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரின் தொடர்பு அலுவலர் ஆர். ஜெயகுமார் (கைபேசி எண். 94451 90058).
பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் இருக்கும் பட்சத்தில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைபேசி எண்கள் 1950 மற்றும் 1800 425 7012 மற்றும் 044-2533 3001, 2533 3003, 2533 3004, 2533 3005, 2533 3006 ஆகிய எண்களிலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள சி-விஜில் (C-Vigil App) மொபைல் செயலி மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago