துரை வைகோவுக்கு ரூ.35.90 கோடி சொத்து: அதிமுக கருப்பையா ரூ.2.82 கோடி

By செய்திப்பிரிவு

திருச்சி: மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு ரூ.35.90 கோடி மதிப்பிலான சொத்து, அதிமுக வேட்பாளருக்கு ரூ.2.82 கோடி, அமமுக வேட்பாளருக்கு ரூ.8.18 கோடி சொத்து உள்ளதாக அபிடவிட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து மதிப்பு பிரமாணப் பத்திரத்தில் (அபிடவிட்) குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்கள் வருமாறு: மதிமுக வேட்பாளர் துரைவைகோ சொத்து மதிப்பு: கையிருப்பு ரொக்கம்: துரை வைகோ ரூ.2,05,000, மனைவி கீதா ரூ.5,02,000, மகன் வருண் ரூ.2,500, மகள் வானதி ரேணு ரூ.2,000.

துரை வைகோ குடும்பத்தினர் பெயரில் அசையும் சொத்து ரூ.2.19 கோடி, அசையா சொத்து ரூ.33.72 கோடி என மொத்தம் ரூ.35.91 கோடி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடனாக ரூ.1.35 கோடி உள்ளது. ஒரு கார் உள்ளது. அசையும் சொத்தில் 2.07 கிலோ தங்க நகைகள், 6.38 வெள்ளி, ரூ.19 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் அடக்கம். துரை வைகோ மீது வழக்கு இல்லை.

அதிமுக வேட்பாளர் ப.கருப்பையா, மனைவி விமலா, மகன் குருநாத் பன்னீர்செல்வம், மகள் மகிபாலாநானி ஆகியோருக்கு அசையும் சொத்தாக ரூ.2.52 கோடி, அசையா சொத்தாக ரூ.30.75 லட்சம் என மொத்தம் ரூ.2.83 கோடி உள்ளது.

கருப்பையாவுக்கு ரேஞ்ச்ரோவர் உட்பட 3 கார்கள், 5 டிப்பர் லாரிகள் உள்ளன. 506 கிராம் தங்க நகைகள் உள்ளன. ரூ.3.07 கோடி கடன் உள்ளது. கருப்பையா பெயரில் கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது

ப.செந்தில்நாதன்

அமமுக வேட்பாளர் ப.செந்தில்நாதன், மனைவி மகேஸ்வரி, மகள்கள் பவித்ரா, யாழினி ஆகியோர் பெயரில் அசையும் சொத்தாக ரூ.88.31 லட்சம், அசையா சொத்தாக ரூ.7.30 கோடி என மொத்தம் ரூ.8.18 கோடி சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

1.100 கிலோ தங்கம் உள்ளது. ரூ.64.08 லட்சம் கடன் உள்ளது. 2 கார், ஒரு இருசக்கர வாகனம் உள்ளது. திருச்சி கோட்டை, தில்லைநகர் ஆகிய காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்