சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதன் சொத்து மதிப்பு ரூ.305 கோடி

By செய்திப்பிரிவு

சிவகங்கை: சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன் மற்றும் அவரது குடும்பத்துக்கு ரூ.305 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. தேவநாதன் பெயரில் மொத்தம் ரூ.149.27 கோடி மதிப் பிலான அசையும் சொத்துகள், ரூ.37.30 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள், அவரது மனைவி மீனாட்சி பெயரில் ரூ.25.17 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ.13 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள், அவரது மகள் ஹரிஷ்மா பெயரில் ரூ.39.61 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ.50 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகள், ஹரினி பெயரில் ரூ.39.61 கோடி மதிப்பிலான அசையும் சொத்து கள், ரூ.50 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன.

இதில் தேவநாதனிடம் கையிருப்பாக ரூ.1.30 லட்சம், ரூ.27.79 லட்சம் மதிப்பிலான 452 கிராம் தங்கம், ரூ.34.87 லட்சம் மதிப்பிலான 45 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளன.

அவரது மனைவி மீனாட்சி கையிருப்பாக ரூ.85 ஆயிரம், ரூ.54.73 லட்சம் மதிப்பிலான 890 கிராம் நகைகள், ரூ.24.80 லட்சம் மதிப்பிலான 32 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.40 லட்சம் வைரங்கள் உள்ளன.

மகள்கள் ஹரிஷ்மா கையிப்பாக ரூ.55 ஆயிரம், ரூ.1.92 கோடி மதிப்பிலான 3,135.40 கிராம் தங்கம், ரூ.2 கோடி மதிப்பிலான 37.485 கேரட் வைரம், ரூ.27.99 லட்சம் மதிப்பிலான 36.125 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளன.

ஹரினி கையிருப்பாக ரூ.55 ஆயிரம், ரூ.1.92 கோடி மதிப்பிலான 3,135.40 கிராம் தங்கம், ரூ.2 கோடி மதிப்பிலான 37.485 கேரட் வைரம், ரூ.27.99 லட்சம் மதிப்பிலான 36.125 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளன. இதுதவிர தேவநாதனுக்கு ரூ.91.48 கோடி கடன், அவரது மனைவி மீனாட்சிக்கு ரூ.6.82 கோடி கடன் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்