பாஜக கூட்டணி தவிர பிற கட்சிகளுக்கு இதுவரை சின்னம் ஒதுக்காதது ஜனநாயக படுகொலை: துரை வைகோ குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

திருச்சி: பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கிய நிலையில், மதிமுக, விசிக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காதது ஜனநாயக படுகொலை என மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்தார்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கிய நிலையில் மதிமுக, விசிகபோன்ற கட்சிகளுக்கு இதுவரைதேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்காதது ஜனநாயக படுகொலை.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். மார்ச் 26-ம் தேதி (நாளை) வழக்கு விசாரணைக்கு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக செயல்வீரர் கூட்டத்தில் துரை வைகோ,சின்னம் தொடர்பான விவகாரத்தில் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டுபேசியது திமுக-மதிமுக தொண்டர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘அப்படி யாரிடமும் எந்த கசப்புணர்வும் ஏற்படவில்லை.

மனிதர்கள் என்றால் உணர்வுகள், உணர்ச்சிகள் இருக்கும். இச்சம்பவம் குறித்து தலைவர் வைகோவிடம் பேசவில்லை. அது முடிந்துவிட்டது. முன்னோக்கி தான் நாம் செல்ல வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்