தமிழகம்

வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேருக்கு குரல் மாதிரி சோதனை நடத்த அனுமதி

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் குறித்து 3 பேரை குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்த அனுமதிஅளிக்க வேண்டும் எனக் கோரி புதுக்கோட்டை வன்கொடுமைதடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் அண்மையில் மனுத் தாக்கல் செய்தனர்.

இதற்கு நீதிபதி ஜெயந்தி அனுமதிஅளித்து உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னையில் உள்ள தடயஅறிவியல் ஆய்வகத்தில் சோதனை விரைவில் நடைபெறவுள்ளது.

SCROLL FOR NEXT