சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், சேத்துப்பட்டில் இருந்துகீழ்ப்பாக்கம் நோக்கி சுரங்கப்பாதை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, சேத்துப்பட்டு ஏரிக்கு கீழ் சுரங்கப்பாதை பணி சில வாரங்களில் தொடங்கும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்,3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒரு வழித்தடம் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான மூன்றாவது வழித்தடம் ஆகும்.
45.4 கி.மீ. தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை மற்றும் பசுமை வழிச்சாலையில் சுரங்கப்பாதை பணிகள் அடுத்தடுத்து தொடங்கி நடைபெறுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, 2.8 கி.மீ. தொலைவில் சேத்துப்பட்டில் இருந்து நுங்கம்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. இதுவரை 225 மீட்டர் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலமாக, 80 மீட்டர் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
» தண்ணீர் ஆதாரங்களை தேடி கண்டுபிடிப்பது அவசியம்: வா டெக் வபாக் நிறுவனம் தகவல்
» மேனகா காந்தி, கங்கனா ரணாவத் உட்பட 111 பாஜக வேட்பாளர் அடங்கிய 5-வது பட்டியல் வெளியீடு
இதற்கிடையில், சேத்துப்பட்டில் இருந்து கீழ்ப்பாக்கம் நோக்கி, சுரங்கப்பாதை பணிகள் கடந்த10 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தப்பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தாமிரபரணி இயந்திரம்: இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சேத்துப்பட்டு வடக்கு - கீழ்ப்பாக்கம் நோக்கி சுரங்கப்பாதை பணி சமீபத்தில் தொடங்கியது.
இந்த பணியை மேற்கொள்ள தாமிரபரணி என்ற சுரங்கம்தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.தற்போது, சேத்துப்பட்டு ரயில்வே தண்டவாளம் அருகே சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன.
சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம் ஆகிய இரண்டு நிலையங்களுக்கு இடையே 838 மீட்டர் தூரத்தை இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் கடக்க உள்ளது. முதலில் சேத்துப்பட்டு ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டும். அதன்பிறகு, சேத்துப்பட்டு ஏரிக்கு கீழ் தரைமட்டத்தில் இருந்து 18 மீட்டர் கீழ் சுரங்கப்பாதை பணி நடைபெறும்.
இந்த பணி சில வாரங்களில் தொடங்கும். ரயில்வே தண்டவாளம்,படகு குளம், சேத்துப்பட்டு சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதுமிகப்பெரிய சவாலாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago