சென்னை: போக்குவரத்துத் துறை செயலருக்கு அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க மாநிலத் தலைவர் டி.கதிரேசன் அனுப்பிய கடிதம்: போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2016-ம் ஆண்டு செப்.1 முதல் 2017 ஆகஸ்ட் மாதம் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தப்படி உரிய பணப்பலன்கள் வழங்கப்படவில்லை.
இக்காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை, விடுப்பு சம்பளம் கணக்கீடு செய்து வழங்க வேண்டும் என போக்குவரத்துத் துறைச் செயலர் தரப்பில் கடந்த ஆண்டு மே 25-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அரசாணை பிறப்பித்து 10 மாதங்களாகியும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் பணப்பலன்களை வழங்கவில்லை. இது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், 12 வாரங்களில் 13-வது ஊதிய ஒப்பந்தத்தின்படி கணக்கீடு செய்து பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்பிறகும் வழங்க மறுத்ததால் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்த போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் கடந்த மாதம் 21-ம் தேதி பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து கோட்டங்களிலும் மேற்குறிப்பிட்ட காலத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு 13-வது ஒப்பந்தப்படி பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளம் கணக்கீடு செய்து வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago