மதுரை மண்டலத்தில் இணைய வழியில் பதிவான முதல் பத்திரத்தை 15 நிமிடங்களில் உரிமையாளரிடம் அதிகாரிகள் ஒப்படைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.
தமிழகத்திலுள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருள் ஸ்டார் 2.0 நிலைக்கு உயர்த்தப்பட்டது. இதையடுத்து இணையதளம் மூலம் மட்டுமே 100 சதவீதம் பத்திரப்பதிவு செய்யும் திட்டத்தை முதல்வர் கே. பழனிசாமி நேற்று முன்தினம் தொடக்கி வைத்தார். இதையடுத்து நேற்று முதல் இணையவழி பத்திரப் பதிவு தொடங்கியது.
மதுரை மண்டலத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்கள் உள்ளன. இங்குள்ள 102 பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் இணையவழி பத்திரங்களை பதிவு செய்ய சார்பதிவாளர்கள் தயாராக இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மண்டல பதிவுத் துறை துணைத் தலைவர் சு.சிவக்குமார் செய்திருந்தார்.
முதல்வர் திட்டத்தை தொடக்கி வைத்ததும், நேற்று முன்தினமே ஒத்தக்கடை பதிவு அலுவலகத்துக்கு முதல் ஆவணம் இணையதளம் மூலம் வந்தது. மதுரை அருகே அரும்பனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி தான் வாங்கவுள்ள நிலத்துக்கான ஆவணம் இது. இதைப் பரிசீலித்த சார் பதிவாளர் ஆர்.நாகசுப்பிரமணியன் பதிவதற்கு தகுதியான ஆவணம் என அனுமதித்து உத்தரவிட்டார். நேற்று பகல் 11 மணியளவில் அசல் பத்திர ஆவணங்களை முத்துலட்சுமி தாக்கல் செய்தார். கைரேகை, புகைப்படம் என அனைத்து நடைமுறைகளையும் 10 நிமிடங்களில் முடித்து ஆவணத்தை பதிவு செய்தார் சார் பதிவாளர். அடுத்த 5 நிமிடங்களில் பதிவு செய்யப்பட்ட ஆவணம் முத்துலட்சுமியிடம் வழங்கப்பட்டது. பதிவுத்துறை துணைத் தலைவர் சு.சிவக்குமார், மாவட்ட பதிவாளர் ஆர்.கண்ணன் உடனிருந்தனர்.
பதிவுத்துறை துணைத் தலைவர் சு.சிவக்குமார் கூறியது: மதுரை மண்டலத்தில் இணையவழியில் பதிவான முதல் ஆவணம் உரிமையாளரிடம் 15 நிமிடங்களில் வழங்கப்பட்டது. கடந்த வாரமே தேவையான பயிற்சி அளிக்கப்பட்டதால் சிரமம் இன்றி ஆவணம் பதியப்பட்டது. இதனால் பதிவுதாரர்களும் மகிழ்ச்சியோடு சென்றனர்.
வழக்கமாக ஆவணங்களைப் பெற குறைந்தது ஒரு வாரம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆவணத்தின் நகல் பட்டா மாறுதலுக்காக உடனே உரிய தாலுகாவுக்கு அனுப்பப்பட்டது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago