‘10 ஆண்டாக ஊழல் இல்லாத ஆட்சி’ - தினகரன்

By செய்திப்பிரிவு

கந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் ஊழல் இல்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்தார். காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்த அவர், மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பாஜகவில் அனைத்து மதத்தினரும் உள்ளனர். அந்தக் கட்சியை மதவாதக் கட்சி என்று கூறுவதை ஏற்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் ஊழல் இல்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 3-வது முறையாக மோடி பிரதமராவது உறுதி. இந்த முறை பாஜக சார்பில் கூடுதல் உறுப்பினர்கள் மக்களவையை அலங்கரிப்பர்.

ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவது மகிழ்ச்சி. அவர் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். நாங்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறோம். அமலாக்கத் துறை என்பது தனிப்பட்ட அமைப்பு. அதற்கு அளவில்லா அதிகாரம் உள்ளது என்பதை நீதிமன்றமே கூறியுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 secs ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

மேலும்