சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளுக்கு 6 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வட சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூர், ஆர்.கே. நகர், ராயபுரம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் செலவினப் பார்வையாளராக அபிஜித்அதிகாரி (94459 10931) நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பூர், கொளத்தூர் மற்றும் திரு.வி.க.நகர் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் செலவினப் பார்வையாளராக ஜி.ஏ. ஹரஹானந்த் (94459 10932) நியமிக்கப் பட்டுள்ளார். மத்திய சென்னை மக்களவை தொகுதியில் வில்லிவாக்கம், எழும்பூர் மற்றும் அண்ணாநகர் ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தல் செலவின பார்வையாளராக சுபோத் சிங் (94459 10935) நியமிக்கப்பட்டுள்ளார். துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மற்றும் ஆயிரம் விளக்கு ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தல் செலவினப் பார்வையாளராக மதுகர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் சென்னை மக்களவை தொகுதியில் விருகம்பாக்கம், தியாகராய நகர் மற்றும் மயிலாப்பூர் ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தல் செலவினப் பார்வையாளராக முகேஷ் குமாரி (94459 10942) நியமிக்கப்பட்டுள்ளார். சைதாப்பேட்டை, வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தல் செலவினப் பார்வையாளராக மானசி திரிவேதி (94459 10945) நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைபேசி எண்கள் 1950 மற்றும் 1800 425 7012, 044-2533 3001, 2533 3003, 2533 3004, 2533 3005, 2533 3006 ஆகிய எண்களிலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள சி-விஜில் (C-Vigil App) கைபேசி செயலி மூலமாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago