திருவாரூர்: நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு பலமுறை உள்ளான தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பான முறையில் செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து பல சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ள நிலையில், அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று கூறியுள்ளார். இதைஎதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதேபோல உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு பலமுறைஉள்ளான ஆளுநர், இனியும்அந்தப் பதவியில் நீடிப்பதுபொருத்தமற்றது. எனவே, அவர் அரசியலமைப்புச் சட்டத்தையும், நீதிமன்றத்தையும் மதித்து,தாமாக முன்வந்து பதவி விலகவேண்டும். இல்லாவிட்டால் அவரை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago