நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டால் காவல் துறையினர் உட் பட அனைவரும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என்று தென்கொரிய மனக் கல்வி நிபுணர் டாக்டர் ஜோ க்யூ யுன் தெரிவித்துள்ளார்.
போலீஸாருக்கு மன அழுத்தத்தை குறைப்பது தொடர்பான கருத்தரங்கம், சென்னை காவல் ஆணையர் அலுவலகக்தில் நேற்று நடந்தது. தென் கொரியாவைச் சேர்ந்த சர்வதேச மனக்கல்வி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஜோ க்யூ யுன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மன அழுத்தத்தை குறைப் பது தொடர்பாக போலீஸாருக்கு ஆலோசனைகளை வழங்கி னார்.
கருத்தரங்கில் காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், கூடுதல் காவல் ஆணையர்கள் எஸ்.என்.சேஷசாயி (தலைமையிடம்), எச்.எம்.ஜெயராம் (வட சென்னை), துணை ஆணையர்கள் எஸ்.சரவணன் (தலைமையிடம்), ஏ.ஜெயலட்சுமி (நிர்வாகம்) உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.
கருத்தரங்குக்குப் பிறகு ‘தி இந்து’விடம் டாக்டர் ஜோ க்யூ யுன் கூறிய தாவது:
காவல் துறை, ஐடி உட்பட அனைத்து துறைகளிலும் வேலை பளு அதிக அளவில் உள்ளது. இதனால், அதிக அளவில் பணம் வைத்திருந்தாலும் பலருக்கு மனம் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. ஏதோ ஒரு பிடியில் சிக்கிக் கொண்டுள்ளோம். அதுதான் மன அழுத்தம். பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்கள், மாணவர்களும் இதில் சிக்கிக் கொண்டுள்ளனர். இதிலிருந்து அனைவரும் விடுபட வேண்டும். இதற்கு மனப் பயிற்சி அளிக்க வேண்டும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதயப்பூர்வமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.
தற்போது மற்றவர்களிடம் பேசுவது என்பது மிகவும் குறைந்துவிட்டது. கணவன், மனைவி, மகன், மகள், உறவினர், நண்பர்கள், பக்கத்து வீட்டார் என யாரிடமும் பலர் பேசுவதில்லை. இதுவும் மன அழுத்தத்துக்கு ஒரு காரணம். மற்றவர்களுடன் இதயம் மூலம் தொடர்புகொள்ள வேண்டும். போலி யான வார்த்தைகளை பேசாமல், உண்மை வார்த்தைகள் மனதில் இருந்து வரவேண்டும். இதன்மூலம் நேர்மறை எண்ணம் வளரும். செயல் பாடு அதிகரிக்கும். எண்ணிய இலக்கையும் அடைய முடியும்.
வார்த்தை மாறினால் செயலும் மாறும். மாற்றம் இதயத்தில் இருந்து வரவேண்டும். மன அழுத்தத்தின் வெளிப்பாடாக பலர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுகின்றனர். சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். அவர்களை எல்லாம் மாற்ற வேண்டும். சந்தோஷமான தருணங்களை அவர்களுக்கு நினைவுபடுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை மாற்ற முடியும்.
மற்றவர்களுக்காக வாழ்வது சந்தோஷம் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். நேர்மறை எண்ணங்களை எற்படுத்திக் கொண்டால் மன அழுத்தத்தை குறைத்து, அனைத்து செயல்களிலும் வெற்றி பெற முடியும்.
ஒருவரின் இதயம் வலுவாக, ஆரோக்கியமாக இருந்தால் அவர்களை சந்திப்பவர்களும் ஆரோக்கிய மனநிலையில் இருப்பார்கள். வெற்றி பெற அறிவு அதிகம் இருக்க வேண் டும் என்ற நிலை இல்லை. உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்து நேர்மறையாக சிந்தித்தால் வெற்றி பெறலாம். கனவு காண்பவர்கள் ஆழமாக யோசிப்பார்கள். நேரத்தை வீணடிக்காமல் வெற்றி பெறுவார்கள். அந்த வெற்றி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, அனைவரும் கனவு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் ஜோ க்யூ யுன், சர்வதேச மனக் கல்வி நிறுவனத்தின் தலைவராகவும், தேஜோன் மற்றும் சுங்சூங் நகர சர்வதேச இளைஞர் நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார். கருத்து வேறுபாடுகளால் இளைஞர்கள், பெற்றோர் , தம்பதியரிடையே ஏற்படும் பிரிவுகளை தடுக்கும் கல்வி நிபுணராகவும் உள்ளார். மன அழுத்தம், போதைப் பழக்கம், தனிமை ஆகியவற்றில் இருந்து விடுபடுவது தொடர் பாக 35 நாடுகளில் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago