விருதுநகர்: நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகாவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் பாஜகவினர் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜகவில் போட்டியிட மாவட்டச் செயலாளர் பாண்டுரங்கனின் அண்ணன் ஜவஹர், பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன், டெல்லியில் பணியாற்றி வரும் டாக்டர் வேதா தாமோதரன் ஆகியோர் பெயர் தொடக்கத்தில் அடிபட்டது.
ஆனாலும், விருதுநகர் தொகுதியில் பாஜக நேரடியாக போட்டியிடுவதா அல்லது கூட்டணிக்கு ஒதுக்குவதா என்ற குழப்பமான சூழ்நிலையும் நிலவி வந்தது. தேமுதிகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்நிலையில், சமகவை பாஜகவில் இணைத்தமைக்காக ராதிகா சரத்குமாருக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்படலாம் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தமிழ் நடிகர் சரத்குமாரால் கடந்த 2007ல் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தார். பின்னர், அதிமுகவில் சேர்ந்தார். அதன்பின் அதிமுகவிலிருந்து விலகி 2007 ஆகஸ்ட் 31ல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார்.
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கடலூரில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டி
» கேஜ்ரிவால் கைது எல்லை தாண்டிய எதேச்சதிகாரம்: முத்தரசன் கண்டனம்
கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளில் சமக வெற்றிபெற்றது. தென்காசியில் சரத்குமாரும் நாங்குநேரியில் எர்ணாவூர் ஏ.நாராயணனும் வெற்றிபெற்றனர். 2016ல் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு சரத்குமார் தோல்வி அடைந்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சரத்குமார், கடந்த 12ம் தேதி சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்து, வலிமையான ஆட்சி, வலிமையான அரசு அமைய இணைந்து பயணிப்போம், பாடுபடுவோம் என்று கூறி இளைஞர்களின் வருங்கால நலனுக்காகவும் நன்மைக்காவும் பாஜகவில் கட்சியை இணைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
அதையடுத்து, விருதுநகர் மக்களவைத் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமாரை களம் இறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்த ராதிகா, தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்து வருகிறார். ராடன் மீடியா என்ற நிறுவனத்தின் நிறுவனராகவும் பெறுப்பு வகித்து வருகிறார். இதன் மூலம் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து வருகிறார்.
2001ல் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்தார். 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது கணவர் சரத்குமாருடன் அதிமுகவில் இணைந்தார். 2006 அக்டோபர் 18ம் தேதி கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். 2021 முதல் சமத்துவ மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்ததது குறிப்பிடத்தக்கது.
ஓரிரு நாட்களில் பாஜக 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றும், அதில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக ராதிகா சரத்குமார் களம் இறக்கப்படுவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago