வெங்காய விலை உயர்வு: பேரவையில் ருசிகர விவாதம்

By செய்திப்பிரிவு

வெங்காயம் உள்ளிட்ட காய்கறி விலை உயர்வு தொடர்பாக பேரவையில் ருசிகர விவாதம் நடந்தது.

சட்டப்பேரவையில் வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதம் வருமாறு:

சேகர் (தேமுதிக): காய்கறி விலை உயர்வு காரணமாக வெங்காயம், வெண்டக்காய், சுண்டக்காய் இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி என்று இல்லத்தரசிகள் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இது, அவையில் உள்ள பெண் உறுப்பினர்களுக்கும் தெரியும்.

அமைச்சர் பா.வளர்மதி: உறுப்பினர் வீட்டில் ஆராய்ச்சி செய்து விட்டுத்தான் சமையல் செய்கிறார்களா என்பதை தெரிவிக்க வேண்டும்.

அமைச்சர் செல்லூர் ராஜூ: கடந்த திமுக ஆட்சியில்தான் வெங்காய விலை உயர்வாக இருந்தது. இப்போது அவ்வாறு இல்லை.

சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட்): விலை உயர்வு காரணமாக எங்கள் வீட்டில் சாம்பார் செய்யும்போது 10 வெங்காயத்துக்குப் பதிலாக 5 வெங்காயம்தான் போடுகிறார்கள். கடந்த ஆட்சியில் வெங்காய விலை உயர்வு இருந்தது. இப்போது இல்லை என்று அமைச்சர் சொல்வது உண்மைக்கு மாறான தகவல்.

பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): தமிழகத்தில் வறட்சி நிலவுகிறது.

அமைச்சர் உதயகுமார்: நாடு செழிப்பாக இருக்கிறது. மழை பெய்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைகளில் உள்ள நீர் இருப்பு, மழை அளவு ஆகியவற்றை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. வறட்சியால் பயிருக்கு இழப்பீடு தரும் நிலை தற்போது இல்லை. எனவே, இல்லாத ஒன்று இருப்பதுபோல உறுப்பினர் பேச வேண்டாம்.

பாலகிருஷ்ணன்: காய்கறிகளின் விலை அதிகமாக உள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜூ: கடந்த ஆட்சியில் காய்கறிகள் பற்றாக்குறை இருந்தது. காய்கறிகள் விலை உயர்வை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், காய்கறிகள் விலையைக் கட்டுப்படுத்த முதல்வர் ரூ.100 கோடி ஒதுக்கினார். மகாராஷ்டிரா, ஆந்திராவில் இருந்து வெங்காயம் வரவழைக்கப்பட்டது. அதனால் வெங்காய விலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வெங்காய உற்பத்தி செய்யும் விவசாயிகள் 5 ஆயிரம் பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. பண்ணை பசுமைக் கடைகளில் விற்கப்படும் காய்கறிகள், இடைத்தரகர் இல்லாமல் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கப்படுகிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்