நிலத்தடி நீரை வைத்து தீர்ப்பு சொல்லலாமா?- முத்தரசன் கேள்வி

By எஸ்.நீலவண்ணன்

நிலத்தடி நீரை அளவுகோலாக வைத்து, தீர்ப்பு சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று காவிரி நதிநீர் பங்கீடு தீர்ப்பு குறித்து சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் விழுப்புரத்தில் கூறினார்.

விழுப்புரத்திற்கு வந்திருந்த முத்தரசன், காவிரி நதி நீர் தொடர்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்ததற்கு முத்தரசன் கூறியதாவது:

உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. 264 டி எம் சி தண்ணீர் வேண்டுமென கோரிக்கை வைத்தபோது, 192 டி எம் சி அளிக்க தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை மத்திய அரசு 6 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் 177.25 டி எம் சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது. நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விட 14. 75 டி எம் சி தண்ணீர் குறைவாக வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூடுதலாக வழங்க கோரிக்கை வைத்த நிலையில் குறைத்து வழங்கியது ஏமாற்றம் அளிக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டுள்ளது வரவேற்கதக்கது. கர்நாடகா எந்த தீர்ப்பையும் செயல்படுத்தியதில்லை. நிலத்தடி நீரை அளவுகோலாக வைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முத்தரசன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்