மு.க.ஸ்டாலின் 20 நாள் தேர்தல் பிரச்சாரம்: திருச்சியில் நாளை தொடங்குகிறார்

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான 20 நாட்கள் பிரச்சாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சியில் தொடங்குகிறார்.

தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ‘இண்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கும் பணியை வரும் 22-ம் தேதி (நாளை) தொடங்குகிறார். அதன்படி, வரும் 22-ம் தேதி திருச்சி, பெரம்பலூர், 23-ல் தஞ்சை, நாகை, 25-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, 26-ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், 27-ல் தென்காசி, விருதுநகர், 29-ல் தருமபுரி, கிருஷ்ணகிரி, 30-ம் தேதி சேலம், கள்ளக்குறிச்சி, 31-ம் தேதி ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய தொகுதிகளில் முதல்வர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

மேலும் ஏப்ரல் 2-ம் தேதி வேலூர், அரக்கோணம், 3-ல் திருவண்ணாமலை, ஆரணி, 5-ல் கடலூர், விழுப்புரம், 6-ம் தேதி சிதம்பரம், மயிலாடுதுறை, 7-ம் தேதி புதுச்சேரி, 9-ம் தேதி மதுரை, சிவகங்கை, 10-ம் தேதி தேனி, திண்டுக்கல், 12-ல் திருப்பூர், நீலகிரி, 13-ல் கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் முதல்வர் பிரச்சாரம் செய்கிறார்.

அதேபோல் ஏப்ரல் 15-ம் தேதி திருவள்ளூர், வடசென்னை, 16-ல் காஞ்சிபுரம், பெரும்புதூர், 17-ம் தேதி தென்சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கவுள்ளார்.

முதல்வர் பிரச்சாரத்துக்கு குறித்த நேரத்துக்குள் செல்ல வேண்டியுள்ளதால், வழியில் வேறு எவ்வித நிகழ்ழ்சிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று திமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்