திமுக 50 முக்கிய வாக்குறுதிகள்: பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.65, கேஸ் ரூ.500, நீட் விலக்கு, ‘அக்னிபாத்’ ரத்து!

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி, திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சென்னை அறிவாலயத்தில் வெளியிட்டார். திமுகவின் முக்கிய வாக்குறுதிகள்:

மத்திய அரசுப் பணிகளுக்கும், மத்தியப் பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நடைபெறும் பணியாளர் தேர்வுகளுக்கு தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளின் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்துவதற்கு புதிய அரசு ஆவன செய்யும்.

35 ஆண்டுகளுக்கு மேலாக முகாம்களில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு புதிய அரசு ஆவன செய்யும். இலங்கை திரும்பிச் செல்ல விரும்புவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கிகளில் பெற்றிருக்கும் கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்படும்.

மாநிலங்களில் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

பணி ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் மத்திய அரசில் பணியாற்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் இணைய 2 ஆண்டுகள் காத்திருப்புக் காலமாக அறிவித்து புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்.

பயிர் காப்பீட்டுக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை அரசே செலுத்தும். இத்திட்டம் செங்கரும்பு பயிரிடுவோருக்கும் விரிவாக்கப்படும்.

MGNREGA திட்டத்தின் கீழ் வேலை நாட்கள் 150-ஆக அதிகரிக்கப்படும். நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரூ.400 ஊதியம் வழங்கப்படும்.

மத்திய அரசின் மாநிலங்களுக்கான நிதி பங்களிப்பு அந்தந்த மாநிலங்களில் வசூலாகும் வருமான வரி, ஜிஎஸ்டி ஆகியவற்றின் அடிப்படையில் உறுதி செய்யப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE