40 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் சீமான்

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை, கட்சியின்
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் வரும் 23-ம் தேதி சென்னையில் நடை பெறுகிறது.

இதுதொடர்பாக கட்சி தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட உள்ள 40 வேட்பாளர்களை, ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்வுக்கு தலைமை வகித்து வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்.

அதன்படி மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் வரும் 23-ம் தேதி மாலை 5 மணிக்கு, சென்னை கோவிலம்பாக்கம், துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனை அருகே நடைபெற உள்ளது.

முன்னதாக பிரச்சாரத்துக்கான களப்பணிகளை திட்டமிட்டு ஒருங்கிணைப்பதற்காக போட்டியிட இருக்கும் 40 வேட்பாளர்கள் மற்றும் தொகுதிவாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் உடன் கலந்தாய்வு கூட்டம் சென்னை அண்ணாநகரில் நாளை (மார்ச்.21) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்