கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் 11 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக, அதன் கூட்டணியின் வேட்பாளர் களே வெற்றி பெற்றனர். கோவை, நீலகிரியில் இருமுறை பாஜக எம்.பிக்கள் தேர்வாகியுள்ளனர். இச்சூழலில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, நடப்பு மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் சில மக்களவைத் தொகுதிகளையாவது கைப்பற்றிவிட வேண்டும் என பாஜகவினர் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.
அதற்கேற்றார் போல், பிரதமர் மோடி கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் பல்லடம் பொதுக்கூட்டம், கோவை ரோடு ஷோ, சேலம் பொதுக்கூட்டம் என மூன்று முறை வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, ‘‘கோவை, திருப்பூர், நீலகிரியில் பாஜகவுக்கு வாக்குவங்கி சற்று அதிகமாக உள்ளது. 2014-ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற பாமக தருமபுரியை கைப்பற்றியது. தற்போது பிரதமரின் தொடர் பிரச்சாரம், கொங்கு மண்டலத்தில் பாஜக கூட்டணியின் வெற்றிக்கு கை கொடுக்குமா, பாஜகவின் வாக்கு சதவீதத்தை உயர்த்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்’’ என்றனர்.
பாஜக ஊடகப் பிரிவு மாநில துணைத் தலைவர் சபரிகிரீஷ் கூறும்போது,‘‘ பிரதமரை பற்றிய திராவிட கட்சிகளின் கட்டமைப்பை உடைக்கும் வகையிலும், கொங்கு மண்டலத்தில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும் பிரதமரின் தொடர் பிரச்சாரம் உள்ளது’’ என்றார்.
பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறும்போது, ‘‘பிரதமர் தமிழகத்துக்கு பல ஆயிரம் கோடி மதிப்பில், பல்வேறு திட்டங்களை தந்துள்ளார். லஞ்சம், ஊழலுக்கு எதிராக தனது நடவடிக்கையை மக்களிடம் தெளிவுபடுத்துகிறார்.
திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் மக்கள் நலனுக்கு எதையும் கொண்டு வரவில்லை. பாஜகவின் கூட்டணி பலமாக உள்ளது. இந்த முறை கொங்கு மண்டலம் உட்பட தமிழகம் முழுவதும் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago