சென்னை: தமிழகத்தில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல், திமுக தேர்தல் அறிக்கை ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில், கூட்டணி கட்சிகள் 19 தொகுதிகளிலும், திமுக நேரடியாக 21 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. காங்கிரஸ் கட்சி விருப்ப மனு பெற்றுள்ள நிலையில், ஒருசில நாளில் வேட்பாளர் அறிவிப்பு வெளியாக உள்ளது.
இந்நிலையில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். அந்த வகையில், சென்னையின் 3 தொகுதிகள், பெரும்புதூர், வேலூர், காஞ்சிபுரம், நீலகிரி, தூத்துக்குடி உட்பட 16 தொகுதிகள் வரை கடந்த முறை போட்டியிட்ட வேட்பாளர்களே மீண்டும் களம்காண்கின்றனர். புதிதாக உள்ள பெரம்பலூர், தேனி, கோவை, ஈரோடு, ஆரணி தொகுதிகளுக்கு புதியவர்கள் தேர்வு செய்யப்படலாம் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு, மாவட்ட வாரியாக பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கருத்துகளை பெற்று, தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளது. இந்த தேர்தல் அறிக்கையையும் முதல்வர் இன்று வெளியிடுவார் என திமுகவினர் தெரிவித்தனர்.
» ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை: சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி
» ‘இது ஆர்சிபி அணியின் புதிய அத்தியாயம்’ - விராட் கோலி @ பெங்களூரு
முதல்வர் ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக இன்று பகல் 12 மணிக்கு நடக்கிறது. இதற்கான அறிவிப்பை பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டார். இதில், தேர்தல் வியூகம், தொகுதி வாரியாக நடைபெறும் பணிகள், கூட்டணியில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் திமுக சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago