தகவல் தொடர்பு பிரச்சினையால் பணியில் சேர முடியாமல் செவிலியர்கள் தவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. சமீபத்தில் 1,196 செவிலியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. மார்ச் 18-க்குள்பணியில் சேருமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நியமன ஆணை பெற்ற செவிலியர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு சென்று பணியில் சேரத் தொடங்கினர். ஆனால்,தகவல் தொடர்பு பிரச்சினை காரணமாக, சில மருத்துவமனைகளில் செவிலியர்களை பணியில் சேர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதனால், 40-க்கும் மேற்பட்டோர் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, குளறுபடிகள் சரிசெய்யப்பட்டுள்ளன.

இதுபற்றி மருத்துவ ஊரக நல பணிகள் இயக்குநர் இளங்கோமகேஷ்வரன் கூறும்போது, ‘‘தகவல் தொடர்பு பிரச்சினையால், சில இடங்களில் செவிலியர்கள் பணியில் சேர்வதில் தாமதம் ஏற்பட்டது. இடர்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டதை அடுத்து, செவிலியர்கள் பணியில் சேர்ந்து வருகின்றனர்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்