தேர்தல் பத்திரங்கள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தேர்தல் பத்திரங்கள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.

இதுகுறித்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறியதாவது:

பாஜக அரசு மறுப்பு: தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், தகவல் தரவும் பாஜக அரசுமறுத்து வருகிறது. இருப்பினும், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம்கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து வருவது வரவேற்கத் தக்கது. இந்த விவகாரத்தில் பாஜகவின் முகத்திரை கிழிந்து வருகிறது.

அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் மூலம்மிரட்டி பணம் பறித்தது குறித்துபிரதமர் மோடி பதில் சொல்லவேண்டும். தேர்தல் காரணமாகஇப்போது நாடாளுமன்ற செயல்பாடுகள் நிறுத்திவைக்கப் பட்டுள்ளன. எனவே, தேர்தல் பத்திரங்கள் குறித்து மக்களுக்கு உண்மை நிலை தெரிவதற்காக சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

மன்னிப்பு கேட்கவேண்டும்: தமிழக அரசு வெள்ள நிவாரணமாக ரூ.1,000 வழங்கியதை குறிப்பிட்டு பெண்களை பிச்சைக்காரர்கள் என்று பேசியிருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண் டும்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இரண்டொரு நாளில் வெளியிடப்படும். திமுக தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்வார்கள்.

நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். பாஜக இயந்திரங்களை நம்பி நிற்கிறது. இத்தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள். மூழ்கும் கப்பலில் பாமக ஏறியுள்ளது. தமிழிசை சவுந்தரராஜன் வேறு மாநிலத்தில் போட்டியிடுவது நல்லது. இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE