எதிர்கால அரசியல் நலனைக் கருத்தில் கொண்டு பாமகவை தனது கூட்டணியில் தன்வசப்படுத்தியதன் மூலம் வட தமிழகத்தில் அதிமுகவை பலவீனப்படுத்த பாஜக வியூகம் அமைத்து காய்களை நகர்த்தி வருகிறது.
மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியானது தமிழகத்தில் வலுவாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில், மெகா கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாமக கட்சியோ அதிமுகவை புறக்கணித்துவிட்டு பாஜகவுடன் இணைந்துள்ளது. பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாமகவை தங்கள் பக்கம் சேர்ந்ததன் மூலம் தனது ராஜதந்திர அரசியலை பாஜக தலைமை நேர்த்தியாக நகர்த்தி உள்ளது. பாஜக - பாமக கூட்டணியால், அக்கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்புகளை உறுதி செய்துவிட முடியாது.
ஏனென்றால், வட தமிழகத்தில் வலுவாக உள்ள பாமக, தென் தமிழகம் மற்றும் கொங்கு மண்டலத்தில் பலமாக இல்லை. இதேபோல், இப்பகுதிகளில் கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ள பாஜக, வட தமிழகத்தில் பலமாக இல்லை. இவ்விரண்டு கட்சிகளின் வாக்குகளை ஒருங்கிணைத்து, வெற்றி வாய்ப்புள்ள தொகுதியை எளிதாக அடையாளம் காண முடியாது. இந்தச் சூழ்நிலையில், பாமகவை தன்வசப்படுத்தியுள்ள பாஜகவின் மறைமுக தேர்தல் வியூகம், அதிமுகவை மையமாக கொண்டு காய்கள் நகர்த்தப்பட்டுள்ளதோ எனத் தோன்ற வைக்கிறது.
» “தொகுதிப் பங்கீட்டில் வாய்ப்பு பெறாத தோழமைக் கட்சியினரும் ஆதரவு...” - ஸ்டாலின் நெகிழ்ச்சி
» மோடியின் கோவை ‘ரோடு ஷோ’வில் நிறுத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் - நடவடிக்கை என்ன?
அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்தால், வட தமிழக தேர்தல் களத்தில் அதிமுக வலிமை பெறும். திமுக கூட்டணியை எதிர்த்து ஓரிரு தொகுதியில் வெற்றியும் பெறலாம் அல்லது வாக்கு வங்கி சதவீதமானது பழைய நிலையில் தொடரலாம். சற்று கூடுதலாகவும் கிடைக்கலாம். இதன்மூலம் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு, கட்சியில் உயரும். அசைக்க முடியாத சக்தியாக, அவர் வலம் வரலாம். இதனை தடுக்கவே, அதிமுகவுடன் பாமக இணைவதை தனது ராஜதந்திரத்தால் பாஜக தடுப்பணை போட்டுவிட்டது. வெற்றி, தோல்வி ஒருபுறமிருக்க, இப்போது வாக்கு வங்கியை தக்கவைக்க வேண்டிய நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜக வளர்ச்சிபெற, மக்கள் பிரதிநிதிகள் தேவை. தேர்தல் களத்தில் தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்துள்ள பாஜக, அதிமுகவுடன் தொடர்ந்து பயணிக்க விரும்பியது. ஆனால், கூட்டணி முறிந்தது. இதையடுத்து அண்ணாமலை கூற்றுப்படி சாம, தான, பேத, தண்ட முறைகளை பாஜக கையாண்டது. எதற்கும், பழனிசாமி பிடிக்கொடுக்கவில்லை. சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற, பாஜகவுடன் கூட்டணி சேருவதை பழனிசாமி தவிர்த்துவிட்டார். இதனால் அவர் மீதான பாஜக பார்வையில் மாற்றம் ஏற்பட்டது.
அதிமுகவின் வாக்குவங்கியை பலவீனப்படுத்தினால், பழனிசாமியின் செல்வாக்கு குறைந்துவிடும், தமிழகத்தில் எதிர்கால அரசியலை நாம் தீர்மானிக்கலாம் என பாஜக கணக்கு போட்டு, கனவுடன் காய்களை நகர்த்தியுள்ளது. இவர்களது கனவு நனவாகுமா என்பது வாக்காளர்களின் ‘ஒரு விரல் புரட்சி’ தீர்மானிக்கும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago