கோவையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 3 டன் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு

By செய்திப்பிரிவு

கோவை: கோவையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று பொதுமக்கள் 3 டன் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், தமிழகத்தில் முதல்முறையாக, கோவையில் மேட்டுப்பாளையம் சாலைசாயிபாபா கோயில் சந்திப்பிலிருந்து ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் நிலையம் வரை 2.50 கிலோமீட்டர் தூரத்துக்கு பிரதமர் மோடிநேற்று வாகனப் பேரணி நடத்தி னார். பேரணி தொடங்கிய சாயிபாபாகோயில் அருகே, பெண்கள்,குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு, கையில் பதாகைகளை ஏந்தியவாறு உற்சாகத்துடன் பிரதமரை வவேற்றனர்.

2.5 கிலோ மீட்டர்: சாயிபாபாகோயில் சந்திப்பு அருகே தொடங்கிய வாகனப் பேரணி, அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயர் கல்விநிறுவனம், வடகோவை, சிந்தாமணி, டி.வி.சாமி சாலை வழியாக ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல்நிலையத்தை அடைந்து நிறை வடைந்தது. இப்பேரணியில் 2.5கி.மீ. தொலைவுக்கு 26 இடங்களில் கட்சியினர் திரண்டிருந்தனர்.

தொடங்கியதில் இருந்து ஒருமணி 15 நிமிடங்களில் பேரணியை பிரதமர் நிறைவு செய்தார். தொடங்கிய இடத்திலிருந்து முடியும் இடம் வரை வழிநெடுகிலும் பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் 3 டன்களுக்கு மேல் பூக்களை காரின்மீது வீசி பிரதமரை வரவேற்றனர்.

26 வகையான கலைநிகழ்ச்சி: ஒவ்வொரு 100 மீட்டர் தூரத்தில் ஆயிரக்கணக்கான பாஜகவினர், பொதுமக்கள் திரண்டிருந்தனர். சுமார் 26 இடங்களில் 26 வகைகலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படுகர் நடனம், பரத நாட்டியம், ஒயிலாட்டம், வள்ளிக் கும்மியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் வரவேற்பு நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்தன.

அயோத்தியில் ராமர் கோயில்கட்டியதற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில், சர்வ சித்தர்கள் கூட்டமைப்பின் சார்பில் சிவனடியார்கள், ‘ஹர ஹர மகாதேவ்’ என முழக்கமிட்டபடி, கையில் நடராஜர் சிலையை வைத்துக் கொண்டு அஞ்சல் நிலையம் அருகே வந்து பிரதமரை வரவேற்றனர்.

அதேபோல், அயோத்தியில் கோயில் கட்டியதற்கு வரவேற்பு தெரிவித்து ‘மேன்மை கொள் சைவ நீதி சிவனடியார்கள் திருக்கூட்டம்’ சார்பில், 108 சிவனடியார்கள், சிவாச்சாரியார்கள் அஞ்சல் நிலையம் அருகே வந்து பிரதமரை வரவேற்றனர்.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் கோவையில் வசிக்கும் குஜராத்,ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வடமாநில மக்கள் திரண்டிருந்து பிரதமரை வரவேற்றனர். வரவேற்பின் போது, வந்தே மாதரம், ஜெய்ராம், வெற்றிவேல் வீரவேல் உள்ளிட்ட கோஷங்களை மக்கள்எழுப்பினர். கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட் டங்களைச் சேர்ந்த பாஜகவினர் பிரதமரை காண திரண்டிருந்தனர்.

பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி வருகையை யொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிரதமரின் வாகனப் பேரணி நடக்கும் இடங்கள் உள்பட மாநகர்முழுவதும் காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் தலைமையில் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE