சென்னை: அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் சார்பில் நேற்று மனுஅளிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னை, ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட ஓய்வூதியர்கள், வாக்காளர் அடையாள அட்டை நகலுடன் இணைக்கப்பட்ட மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களாகிய நாங்கள், 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம்முதல் இன்று வரை அகவிலைப்படி உயர்வில்லாமல் குறைவானஓய்வூதியம் பெற்று வறுமையில் வாழ்ந்து வருகிறோம். அகவிலைப்படி உயர்வை நிறுத்தியதை எதிர்த்து நீதிமன்றங்களில் சங்கங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதில், அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவிட்ட பின்னரும் வழங்காமல் அரசு மேல்முறையீடு செய்து காலம் தாழ்த்தி ஓய்வூதியர்களை வஞ்சித்து வருகிறது.
இதனால் போக்குவரத்துக் கழகஓய்வூதியர்கள் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். எனவே, ஆட்சியர் தலையீடு செய்துஅரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான உரியநடவடிக்கையை எடுத்து, 92 ஆயிரம்ஓய்வூதியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துமாறு அரசிடம்பரிந்துரைக்க வேண்டும்.
» ஆம் ஆத்மி கட்சியினருடன் இணைந்து கவிதா முறைகேடு: அமலாக்கத் துறை தகவல்
» அதிமுக சின்னம், கொடி, லெட்டர்பேடை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நிகழ்வில், சங்கத்தின் துணைச் செயலாளர்கள் கே.குமாரவேல், என்.லோகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago