திமுக கூட்டணியில் அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்துள்ளது திமுக. அந்த வகையில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தென் சென்னை மத்திய சென்னை, வட சென்னை, ஸ்ரீ பெரும்புதூர், அரக்கோணம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஆரணி, வேலூர், தருமபுரி , ஈரோடு, பொள்ளாச்சி, தஞ்சை, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, சேலம், பெரம்பலூர், தென்காசி, கள்ளக்குறிச்சி கோவை ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது. இவற்றில் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுகவில் களமிறக்க திட்டமிட்டிருக்கும் வேட்பாளர்கள் உத்தேசப் பட்டியலைப் பார்க்கலாம். சிட்டிங் எம்பிக்கள் யாருக்கெல்லாம் மீண்டும் வாய்ப்பு? புதிதாக லிஸ்டில் இணைபவர்கள் யார் யார்?
சிட்டிங் எம்.பி.க்களில் யாருக்கெல்லாம் மீண்டும் வாய்ப்பு?
1. தமிழச்சி தங்கப்பாண்டியன் - தென் சென்னை
2. தயாநிதி மாறன் - மத்திய சென்னை
3. கலாநிதி வீராசாமி - வட சென்னை
4. டி.ஆர்.பாலு - ஸ்ரீ பெரும்புதூர்
5. ஜெகத்தரட்சகன் - அரக்கோணம்
6. செல்வம் - காஞ்சிபுரம்
7. அண்ணாதுரை - திருவண்ணாமலை
8. கதிர் ஆனந்த் - வேலூர்
9. சண்முகசுந்தரம் - பொள்ளாச்சி
10. பழனிமாணிக்கம் - தஞ்சாவூர்
11. கனிமொழி - தூத்துக்குடி
12. கவுதம சிகாமணி - கள்ளக்குறிச்சி
13. செந்தில்குமார் - தருமபுரி
14. ஆ.ராசா - நீலகிரி
» திருச்சியில் துரை வைகோ போட்டி: மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிவிப்பு
» திமுக கூட்டணியில் காங்கிரஸ் தக்கவைத்த விருதுநகரில் மீண்டும் மாணிக்கம் தாகூர் போட்டி?
இவர்களில் தமிழச்சி தங்கப்பாண்டியன் (தென் சென்னை), தயாநிதி மாறன் (மத்திய சென்னை), கலாநிதி வீராசாமி (வட சென்னை) கனிமொழி (தூத்துக்குடி), கவுதம சிகாமணி (கள்ளக்குறிச்சி), கதிர் ஆனந்த் (வேலூர்) ஆகியோர் வாரிசுகள் என்பது குறிப்பிடதக்கது. இந்த வாரிசுப் பட்டியலில் இம்முறை நகராட்சி துறை அமைச்சர் நேருவின் மகன் அருண் நேருவுக்குப் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு இணைந்துகொள்வார் என்று அறிவாலய வட்டாரங்கள் உறுதிபட தெரிவிக்கின்றன.
புதியவர்கள் யாருக்கு வாய்ப்பு? - மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி திமுக இணைந்த மகேந்திரனுக்கு கோவை தொகுதி ஒதுக்க அதிக வாய்ப்பு நிலவுகிறது. இளைஞர் அணியின் துணைச் செயலாளர் பிரகாஷுக்கு ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
அதேபோல், சேலம் தொகுதியில் செல்வ கணபதி அல்லது உதயநிதி ஸ்டாலினின் நற்பணி மன்றத்தின் செயலாளராக இருந்த பி./கே.பாபு களமிறக்க அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago