கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் கட்சியினர் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை 26-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மனு அளித்த நிலையில், சின்னம் தொடர்பான வழக்கு இன்று (மார்ச் 18) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. மறுபுறம் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத பட்சத்தில் மாற்று சின்னத்தை விரைவில் அறிவிக்கவும் கட்சி தயாராகி கொண்டிருக்கிறது.
இதையொட்டி நாம் தமிழர் கட்சியின் சின்னம் என்ன என்று வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை கட்சியினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
மேலும் சீமான் ஏற்கெனவே கட்சிக்கான மாற்றுச் சின்னத்தை தேர்ந்தெடுத்து விட்டதாகவும், இந்த வாரம் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago